நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மாநில அளவில் மிகப் பெரிய மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குங்கள் என்ற ஒரு உத்தரவை இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சொல்லியிருக்கிறார். விரைவில் மிகப்பெரிய மாநில மாநாடு நடத்துவதற்கான ஒரு முடிவும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் ? எந்த மாவட்டத்தில் ? இந்த மாவட்ட மாநாடு நடத்தப்பட்டு என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
ஆனாலும் விரைவில் மாநில மாநாடு நடத்துவதற்கு ஒரு திட்டமிடல் என்பது செய்யப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதேபோல தமிழ்நாடு அரசை கண்டிக்கும் விதமாக இந்த மாநாட்டில் தீர்மானங்கள் இடம்பெறம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.