இந்தியா முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் யாரும் ஒன்றாக கூட வேண்டாம் என்ற ஒர் அறிவுறுத்தல் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் மத்திய அரசு, மாநில அரசுகள் எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில்தான் முக்கியமான சுற்றுலாத் தலங்களான செங்கோட்டை , இந்தியா கேட், தாஜ்மஹால் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட உத்தரவில் நாடு முழுவதும் உள்ள புராதான சின்னங்கள் , மியூசியங்கள் மூடப்படுவதாக தெரிவித்திருக்கின்றார்கள். இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் இந்த இடங்களுக்குச் செல்வது, ஒரே இடத்தில் கூடுவது தவிர்க்கப்பட்டு கொரோனா நோயின் தாக்கம் குறைவதைக்கான வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏனென்றால் விடுமுறை விடப்பட்டுள்ளதால் இதனைப் பயன்படுத்தி மக்கள் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ள்ளது.