Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழி கொரோனா மருந்து விலை ரூ.800….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய கொரோனா வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் பாரத் பயோடெக் நாசி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாரத் பயோடெக் இன் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்து விலை 800 ரூபாய் மற்றும் ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி உடன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்து சுவாச குழாயில் வைரஸ் தாக்குதலை தடுத்து சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |