Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ்_ஸை தனிமைப்படுத்தனும்…! யாரும் அவரு கூட இருக்க கூடாது… எடப்பாடி போட்ட கூட்டத்தில் செம பிளான்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட செயலாளர் – கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2024 ஆம் ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதிமுக பல அணிகளாக செயல்பட்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்க்கக்கூடாது என ஒரு தரப்பும்,  ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று, டிடிவி தினகரன் , சசிகலா தரப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் காரசார விவாதம் நடைபெற்றது.

ஓ. பன்னீர்செல்வம் அனைத்திற்கும் பதிலடி கொடுத்து வருவதால் அவரிடம் இருக்கும் அதிமுக ஆதரவாளர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்து, ஓ பன்னீர்செல்வத்தை தனிமைப்படுத்த வேண்டும். தனியாக விட்டு விட வேண்டும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டதாக அங்கிருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

Categories

Tech |