Categories
நாமக்கல் மாநில செய்திகள்

எத்தனை முறை சொல்வது…… சிக்கன் சாப்பிட்டால்…. கொரோனா பரவாது….. பரவாது…. நாமக்கல்லில் விழிப்புணர்வு….!!

கோழி முட்டை மற்றும் கறியால் கொரோனாபரவாது என்பதை நிரூபிக்க நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கோழி முட்டை மற்றும் கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா பரவும் என்ற வதந்தி தமிழகத்தில் பரவி வந்தது. இந்த வதந்தி பரப்பிய 4 பேர்  கைது செய்யப்பட்து விட்டனர். இருப்பினும் இந்த வதந்தியால் தமிழக மக்கள் கோழிக்கறியை ஒதுக்கி வந்தனர். இதன் காரணமாக கோழிக்கறி விற்பனையில்  சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, கோழி விலையை குறைத்தும் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.

அதன்படி, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோழிக்கறி விலை  கிலோ ரூபாய் 50 க்கும் குறைவாக விற்கப்பட்டது. பல இடங்களில் கோழிகளுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் தமிழக மக்களிடையே அச்சம் நீங்காமல் நீடித்து வருகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட வியாபாரிகள்  முட்டை, கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு வராது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Categories

Tech |