நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் கேரள மாநிலத்தில் உள்ள அம்பலவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை கட்டுமான பணி முடிந்ததும் ஐந்து தொழிலாளர்கள் ஜீப்பில் எருமாடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அம்பலவயல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து தொழிலாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.