Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்….. “இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை”…. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. BF 7 எனப்படும் புதியவகை உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட -19 ஒமிக்கிரான் BF. 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.

1. மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும்.

2. எதிர்வரும் புது வருட கொண்டாட்டங்களுக்கு 1/1/2023 அன்று இரவு மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

3. அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்பு உரிய நடைமுறைகளை (sop) பின்பற்றி தங்களில் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் 2 தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. அனைத்து கல்வி நிறுவனங்களும், கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் (sop)  படி செயல்பட வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பொது அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

5. அனைத்து தனியார் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது, ஆனால் அங்கு பணிபுரியம் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கோவிட -19 தடுப்புக்குரிய நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

Categories

Tech |