கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருள் கருப்பட்டி என்றழைக்கப்படுகிறது. சர்க்கரையை போன்று கருப்பட்டி பதனீடு செய்யப்படாததால் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இயற்கையில் கிடைக்கும் கருப்பட்டியில் எவ்வித ரசாயனங்களும் சேர்க்கப்படாததால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் கருப்பட்டியால் செய்த உணவுகளை வழங்க வேண்டும். சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தப்படும் கருப்பட்டியில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலுப்பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
- காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால் நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
- கருப்பட்டி இரத்த சோகையை குறைக்கும் தன்மை பெற்றுள்ளது. மேலும் இரத்த சோகை வராமல் இருக்க பயறு வகைகளுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட வேண்டும்.
- கருப்பட்டி கால்சியம் மற்றும் தாது சத்துகள் அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
- கருப்பட்டியில் தாதுக்கள், மினரல்ஸ் உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. கருப்பட்டி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இதனால் தேக ஆரோக்கியம் மேம்படுகிறது
- சீரகத்தை நன்கு வறுத்து, சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி, நன்கு பசி எடுக்கும். உணவை எளிதில் செரிமானம் செய்யவும் உதவும்.
- குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் நெடுநாட்களாக இருக்கும் சளி தொல்லை முற்றிலும் நீங்கும்.
- கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.