Categories
சினிமா தமிழ் சினிமா

ஆனந்த கண்ணீரில் மூழ்கும் பிக்பாஸ் வீடு…. வெளியான புரோமோ வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9ம் தேதி துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 79 நாட்களை நெருங்கி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று வெளியாகிய முதல் புரொமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பங்கள் நுழைகின்றனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் ஃப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்பின் போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கின்றனர். நீண்ட இடைவேளைக்கு பின் தங்களின் குடும்பங்களை பார்த்த சந்தோஷத்தில் பிக்பாஸ் வீடு ஆனந்த கண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த புரொமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |