Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் அறிமுகம்… மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து… வெளியான அறிவிப்பு…!!!!!!

அடுத்த மாதம் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யபடும்  என தகவல் வெளியாகி உள்ளது.

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் பெயரில் மூக்கு வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.

இன்கோவாக் என்னும் வணிக பெயருடன் இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து சந்தைக்கு வருகிறது. கடந்த 23-ஆம் தேதி இந்த தடுப்பு மருந்தை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்து ஒரு டோஸ் விலை ரூ.800 ஆகும். அதே சமயம் மத்திய மற்றும் மாநில அரசிற்கு ரூ.325 என்ற விலையில் தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த தடுப்பு மருந்து ஜனவரி மாதம் 4-வது வாரத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறியுள்ளனர். இந்த தடுப்பு மருந்து பரிசோதனையின் போது இந்தியா முழுவதும் 14 இடங்களில் 3,100 பேருக்கு கொடுத்து அதன் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு சோதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |