Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குழம்பு சரியில்லை என கூறிய கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த காமராஜர் என்பவரும், வெண்ணிலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பபாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் காமராஜர் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழம்பு சரியில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் காமராஜர் வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நீண்ட நேரமாக குழந்தை அழுது கொண்டிருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வெண்ணிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெண்ணிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |