Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15-ஆம் தேதி வரை… வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு…!!!!!!!

சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட  மாமன்ற கூட்டரங்கில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், நிதி குழு தலைவர்கள், முதன்மை செயலாளர் சுகன்சிங் பேடி, மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மீனம்பாக்கம் சோளிங்கநல்லூரில் புதிய நாய் இன கட்டுப்பாட்டு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும் கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |