கொரோனா வைரஸ் கிருமி தான் படிந்துள்ள பகுதிகளில் சுமார் மூன்று நாட்கள் வரை அப்படியே இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். எந்தெந்த பொருட்களில் எத்தனை மணி நேரம் கோரோனோ கிருமி உயிருடன் இருக்கும் என்பதை பார்க்கலாம்..!
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கிருமிகளை ஆய்வு செய்து வரும் அமெரிக்காவை சேர்ந்த வைரஸ் சூழ்நிலை ஆய்வகத்தின் தலைவர் வின்சென்ட் மொன்ஸ்டர் இந்த கிருமி எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை விவரித்துள்ளனர்.
கோரோனோ பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வெளியேறும் கோரோனோ கிருமிக்கு, சில பொருட்கள் புகலிடமாக உள்ளது. டீ ,காபி பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டிகளில் 24 மணி நேரம் வரை கிருமி படிந்திருக்கும். பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் எவர்சில்வர் பாட்டில்களில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை வைரஸ் கிருமி உயிருடன் இருக்கும் என்கிறார் ஆய்வாளர் வின்சென்ட்.
இவைதவிர காற்றில் கொரோனா வைரஸ் மூன்று மணி நேரம் படர்ந்திருக்கும். தாமிரத்திலான பொருட்களில் நான்கு மணிநேரமும், எவர்சில்வராளான பொருட்களில் 13 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்களில் 14 மணி நேரமும் கிருமி உயிர்ப்புடன் இருக்கும். இப்படி கண்ணுக்கு தெரியாமல் கொரோனா கிருமி படர்ந்திருக்கும் பொருட்களை நாம் தொடுவது அடிக்கடி நிகழக்கூடும் என்பதால்தான், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.