Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் முதல் பாகத்தின் போதே 2-ம் பாகமும் படமாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று பட குழு தற்போது அறிவித்துள்ளது. லைகா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Categories

Tech |