உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்திலுள்ள கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான தி. நகர் எனப்படும் தியாகராய நகரில் கடைகளை மூடவும், சென்னையில் உள்ள பூங்காங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இயங்கும் மாநகர பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் கிருமி நாசினி மூலம் மாநகர பேருந்துகள் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் சுமார் 3, 800 ஏடிஎம்களை அவ்வப்போது தூய்மைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.