கடந்த சில வாரங்களாக சீன நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 1- ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியது. இவ்வாறு சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை அடுத்து ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் புது கொரோனா விதிகளை வெளியிட்டது.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரிக்ககூடும். இது ஜனவரி மத்தியில் அதிக பரவலாக மாறக்கூடும் என்று மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சென்ற காலங்களில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உயர்வின் பகுப்பாய்வின் படி இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த முறை கொரோனா அலை ஏற்பட்டாலும் அதன் பாதிப்பின் கடுமை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது..