Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. சிறுமியை கொடுமைப்படுத்தும் பெண்…. கதறி துடிக்கும் தாய்…. போலீஸ் விசாரணை….!!!!

சிறுமியை தாக்கிய பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஷெபாலி என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அனிதா என்று சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  ஷெபாலி அந்த சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் சிறுமி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து லிப்டில் வந்துள்ளார். இதனை பார்த்த ஷெபாலி அந்த  சிறுமியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துள்ளார்.

பின்னர் சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின்  தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகாரியில் கூறியதாவது,”ஷெபாலி  என்ற பெண்  ஒப்பந்தத்தின் அடிப்படையில் எனது மகளை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்றார். ஆனால் அவர் இரவும், பகலும் எனது மகளை வேலை செய்ய வைத்துள்ளார்.

மேலும் வேலை செய்ய மறுத்தால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் எனது மகளின் உடலில் பல காயங்கள் உள்ளது. எனவே எனது மகளை மீட்டு தர வேண்டும்” என அந்த புகாரில் கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |