Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… வாக்குவாதங்களை தவிர்க்கவும்… வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். வளர்ச்சியில் கொஞ்சம் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிக்கவும். இன்று பண விஷயங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது ரொம்ப தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

தேவையற்ற அலைச்சல் கொஞ்சம் குறையும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். பேசும் பொழுது மட்டும் நிதானத்தை கடைபிடிப்பது போதுமானதாகவே இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். இருந்தாலும் சக மாணவர்களிடம் கொஞ்சம் பழகும் பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு  எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |