ரிஷபம் ராசி அன்பர்களே..! அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாகவே இருக்கும். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்க நேரிடும். இன்று கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. அரசியல்வாதிகளுடன் இருப்பவர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது
இன்று மாணவர்கள் கல்வியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தினால் மட்டுமே நல்ல நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் . கொஞ்சம் கஷ்டப்பட்டு படித்ததை எழுதிப் பாருங்கள். அது மட்டுமில்லை இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் அவ்வப்போது வந்து செல்லும். பேசும் போது நிதானத்தை மட்டும் கொஞ்சம் கடைபிடியுங்கள். கொடுக்கல் வாங்கலிலும் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வருவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று புதன்கிழமை என்பதால் சிவன் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்