2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை..
எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் பொங்கல் பரிசோடு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் இன்று அறிவித்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக அரசு கரும்பு வழங்கப்படும் என கூறியிருப்பது அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். “அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியிருந்தோம். தற்போது கரும்பு வழங்கப்பட உள்ளது. இது அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என குறிப்பிட்டுள்ளார்.