பான்கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கும் செயல்முறைக்கு பலமுறை காலக்கெடு வழங்கியும், இன்னும் சிலர் அதை செய்யவில்லை. இந்த நிலையில் கடைசியாக அரசு மார்ச் 31 2023-க்குள் பான்கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவேண்டும். இல்லையெனில் பான்கார்டுகள் செயலிழந்து விடும் என திட்டவட்டமாக கூறி உள்ளது. அத்துடன் ரூபாய்.1000ஐ அபராதமாக செலுத்துவதன் வாயிலாக பான் கார்டு-ஆதார் இணைக்க முடியும் என அரசு கூறியுள்ளது.
கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்கள் பான்கார்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம். அதன்படி, முதலில் வருமான வரித் துறையின் இணையதளமான incometax.gov.inக்கு போக வேண்டும். தற்போது லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன், ஒரு புது டிஸ்பிளே திறக்கும். அவற்றில் நீங்கள் “வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்” என்பதை கிளிக் செய்யவும். அதன்பின் பான்கார்டு ஆதார் உடன் இணைக்கப்பட்டு இருந்தால், திரையில் ஒரு செய்தி தோன்றும். இணைக்கப்படவில்லை எனில் நீங்கள் பான்கார்டு மற்றும் ஆதார் விபரங்களை பூர்த்தி செய்து இணைக்கலாம்.