சிவப்பு அட்டைதாரருக்கு 4 மாத அரிசிக்காக 2400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அரசின் எந்த உதவி தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.