Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு…. 5 பேர் ஆஜர்….!!!!

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பத்தில் ஏற்கனவே 9 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். முதல் கட்டமாக இந்த சம்பவம் நடந்தவுடன் கோவை மாநகரப் போலீசார் 6 பேரை கைது செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மேலும் மூன்று பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

அதில் முன்னதாக கைது செய்யப்பட்ட அசாருதீன் உள்ளிட்ட ஐந்து பேரை NIA போலீசார் காவலில் எடுத்து விசாரித்த NIA அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் நேற்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அசாருதீன் உள்ளிட்ட ஐந்து பேரை NIA போலீஸ் காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில் 5 பேரையும் பூவிருந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA அதிகாரிகள் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |