ரொக்கப் பணம் மூலம் கொரோனா பரவும் என்பதால் தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட உள்ளது.
கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர் எந்தப் பொருளைத் தொட்டாலும் அதில் அந்த வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்றும், ரொக்கப்பணம் மூலமாகவும் வைரஸ் பரவும் என்ற புதிய வதந்தி தற்போது தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது.
இந்த புது வதந்தியால் பெட்ரோல் பங்குகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணம் மூலம் கொரோனோ பரவும் என்பதால் தமிழகத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் நிலையங்களில் கிரெடிட் டெபிட் கார்டு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.