மதுரையில் 40 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாக போலி வதந்தியை பரப்பியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் நமது மக்களிடையே தாறுமாறாக அதிகரித்து உள்ள நிலையில், அதற்கேற்றபடி மேலும் அச்சத்தை பெருக்க வதந்திகளும் அவ்வப்போது கிளப்பி விடப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் சுமார் 40 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.
ஆனால் கள நிலவரப்படி மதுரையில் ஒருவருக்குக்கூட பாதிப்பு இல்லை. இந்த வதந்தியை பரப்பியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவரை தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொரோனோ நோய்த்தொற்று தேசிய பேரிடர் என்பதால் தொடர்ந்து வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.