Categories
தேசிய செய்திகள்

ரூ. 2,274 கோடி அபராதத்தை செலுத்த தவறியதால்…. கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ நோட்டீஸ்….!!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பான வர்த்தகம் மற்றும் ப்ளே ஸ்டோர் கொள்கை போன்றவற்றில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் இந்திய மத்திய தொழிலக போட்டி ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

அதன்பிறகு google நிறுவனத்துக்கு மத்திய தொழிலக போட்டி ஆணையமானது 1337.76 கோடி அபராதம் விதித்தது. இதைத்தொடர்ந்து 936.44 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால்  ஒரே வாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு 2274 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கூகுள் நிறுவனமானது 2274 கோடி ரூபாயை செலுத்த தவறியுள்ளது. இதனால் google நிறுவனத்திற்கு மத்திய தொழிலக போட்டி ஆணையமானது (CCI ) தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Categories

Tech |