தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா ராங்கி படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை நடிகை திரிஷா பகிர்ந்து கொண்டார்.
அப்போது படங்கள் பற்றிய விமர்சனங்கள் குறித்து நடிகை திரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை திரிஷா கூறியதாவது, நான் ஏற்கத்தக்க விமர்சனங்களை பாராட்டுவேன். ஆனால் சில திமிர் பிடித்தவர்கள் தேவையற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் கூறுகிறார்கள். எனக்கு இப்படிப்பட்ட உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்புவது சுத்தமாக பிடிக்காது. அவர்களுக்கு வேலை இருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. நல்லதை மட்டும் பகிரலாம் என்று கூறினார். மேலும் நடிகை திரிஷாவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.