அமெரிக்காவில் தன்னுடைய மனைவிக்கு கணவர் ஒருவர் வித்தியாசமான முறையில் 67 ஆவது திருமண தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்.
அமெரிக்காவில் நான்சி ஷெல்லார்டு (nancy shellard) எனும் பெண்மணி ஒருவர் வெர்னன் என்ற பகுதியில் உள்ள நர்சிங் ஹோமில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது கணவரான பாப் தங்களது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு நர்சிங் ஹோமிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து நர்சிங் ஹாம் வளாகத்தில் நின்று கொண்டிருந்த பாப், 67 ஆண்டு காதலை நினைவுக்கூறும் வகையில் ஹாட் படத்துடன் வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி நின்றார்.
இதனை சற்று தூரத்தில், அதாவது முதல் தளத்தில் இருந்து பார்த்த அவரது மனைவி மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் அங்கிருந்தவாறே கையசைத்தார். இந்த காட்சி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.