முட்டை விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முட்டை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால் இந்தியாவில் 130க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள கோழிக்கூடு மாவட்டத்தில் மட்டும் 20,000 கோழிகள் அழிக்கப்பட்டது. அதோடு கொரோனா கோழி மூலமாகவும் கோரோனா பரவுகின்றது என்ற வதந்தியும் காட்டுத்தீயை போல பரவியதால் கோழி இறைச்சி , முட்டை விலை கடுமையாக பாதித்தது.
கொரோனா வைரசுக்கு , கோழிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அமைச்சர் தெளிவு படுத்தியும் கோழிக்கறி விலை கடுமையாக சரிந்தத்த்து. நாமக்கல் உயிருடன் கறிக்கோழி விலை ஒன்று 28க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததையடுத்து தற்போது முட்டையும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய நிலவரத்தில் 70 காசுகள் சரிந்து முட்டை விலை சரிந்து 1.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி சத்துணவுக்கு முட்டைஅனுப்புவது குறைவு , விற்பனை சரிவால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முட்டை விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விற்பனையாளர்களை கவலை அடையவைத்துள்ளது.