உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா மருந்து நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர்,சூழலை உன்னிப்பாக கண்காணிக்கவும் கொரோனா மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.