Categories
உலக செய்திகள்

கொரோனாவை சமாளிக்க… மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட 2 ராணுவக் கப்பல்கள்… தயாராக இருக்கும் அமெரிக்கா.!

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாடு 2 ராணுவக் கப்பல்களையே மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, USNS comfort மற்றும் USNS mercy ஆகிய 2 பெரிய கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன.

Image result for With the spread of coronavirus, the US has turned 2 USS comfort and USNS mercy into hospitals

உள்ளூர் மருத்துவமனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிரம்பி வழிந்தால்  இந்த 2 கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய இரண்டு பெரிய நகரங்களுக்கும் இந்த கப்பல்களின் மருத்துவ சேவை தேவைப்படலாம்.

Image result for With the spread of coronavirus, the US has turned 2 USS comfort and USNS mercy into hospitals

ஒவ்வொரு கப்பல்களிலும் சுமார் 1000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு உள்ள நெருக்கடிகளை குறைக்க முடியும். ஒரு கப்பல் நார்ஃபோல்க் துறைமுகத்திலும், மற்றொரு கப்பல் சாண்டியாகோ துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

Categories

Tech |