தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் இரண்டு முறை சென்று வரும் சிறப்பு ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் பயங்கரமாக எதிரொலித்து வரும் கொரோனோ வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தலை உணர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக வணிக வளாகங்கள், உள்ளிட்டவற்றை மூடுவதற்கும், திருமண விழாக்கள் கோவில் திருவிழாக்கள் என முக்கிய நிகழ்வுகளை மார்ச் 31 வரை தடை விதித்தும் உத்தரவிட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் அண்டை மாநிலங்களுக்கு மக்கள் சென்று வருவதை தவிர்க்க அறிவுறுத்தி வந்த சமயத்தில் ரயில் போக்குவரத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம், சென்னை – மதுரை, சென்னை – வேளாங்கண்ணி சென்னை – எர்ணாகுளம் எர்ணாகுளம் – சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை சென்று வரும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கிடையே பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.