Categories
மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி? சிகிச்சை பெற்று வருவதாக தகவல்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 147பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோயில்களும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூரில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 வயது மூதாட்டி உட்பட 3 நபர்களுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் ஏற்கனவே 22 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |