இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது என்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Quick aggressive action is the answer to tackling the #Coronavirus . India is going to pay an extremely heavy price for our governments inability to act decisively.
— Rahul Gandhi (@RahulGandhi) March 18, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 147பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள், பார்க், டாஸ்மாக் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள், அரசியல் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது உயந்து வருவதால் மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.