கொரோனோ வைரஸ் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள ஒரு நோய் என்றால் கொரோனோ வைரஸ் தான். இந்த நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார், 8 கோடி மக்கள், மூன்று அண்டை மாநில எல்லைகள், தினமும் விமான வழியில் ஆயிரக்கணக்கான பயணிகள் என நாள்தோறும் தொடர்ந்து சவால்களை சந்தித்து வரும் அமைச்சர், சுகாதாரத்துறை உயிரை பனையம் வைத்து வேலை பார்க்கும் மருத்துவர்கள் ஆகியோருக்கு நமது நெஞ்சம் நெகிழ நன்றி சொல்வோமா என விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.