Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையை சார்ந்த நபருக்கு குறைவான பாதிப்பு என்பது இருக்கிறது டெல்லியில் இருந்து சென்னை வந்தவருக்கு குறைவான பாதிப்பு இருப்பதால் அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார் சென்னையில் மேலும் ஒருவருக்கு குறைவான பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் இந்த தகவலை தெரிவிக்க மருத்துவ நிபுணர் குழுவில் தீவிரமான சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறது

தமிழகத்தில் கொரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது கடந்த 7ஆம் தேதி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் அவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து வீட்டுக்கு சென்ற அவர் இன்று காலை மீண்டும் மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான தகவலை பதிவிட்டிருக்கிறார். அதாவது தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டப்பின் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில்தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

Categories

Tech |