Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் குறைந்த கொரோனா…. நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…!!!

இந்தோனேசிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, பிரேசில், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசு கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரான ஜோகோ விடோடோ கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் 1.7 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்ததால், கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |