உத்தரபிரதேசத்தில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,
உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1 முதல் 8 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறவிருந்த தேர்வுகளை தள்ளி வைக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோரோனோவின் தீவிரம் மேலும் அதிகரிப்பதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டாம் அவர்களை பாஸ் செய்து அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்க அந்தந்த கல்வி நிலையங்களுக்கு உத்திரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.