கடலூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் சிங் மற்றும் குல்தீப் சிங் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து, 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.