Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை தெற்கு பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த அருண்குமார் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருண்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |