உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. சிட்னி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்க மக்கள் 2023 புத்தாண்டை வரவேற்றனர்.
Categories