கர்நாடகாவின் மைசூர் நகரில் 11 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்து சென்றனர். ஆனால் பல்வேறு மருத்துவமனைகளில் பார்த்தும் எந்த பலனும் இல்லை. கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி படிப்பையும் இடையிலேயே நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் இறப்பை சிகிச்சை நிபுணரிடம் சென்ற போது அவர் முழு அளவில் எண்டோஸ்கோபி செய்து பார்த்து சிறுமியின் வயிற்றில் பெரிய பந்து வடிவிலான முடி இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது சாப்பிடும் உணவும், முடியும் கலந்து ஒருவித தோற்றத்துடன் காணப்பட்டுள்ளது. முடி நீண்ட அளவில் இருந்ததனால் எண்டோஸ்கோபி வழியே அதனை வெளியேற்ற முடியவில்லை. இதனையடுத்து சிறுமிக்கு லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அரை கிலோ எடை கொண்ட முடி நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வலி குணமடைந்து சிறுமி உடல் நலம் தேறி வருகின்றார். இதனையடுத்து சிறுமியிடம் நடைபெற்ற கவுன்சிலிங்கில் “அந்த சிறுமி மன அழுத்தம் அதிகரிக்கும் போது தலை முடியை பிய்த்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்”. ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் கவனித்த போதிலும் இரண்டு ஆண்டுகளாக அலட்சியமாக இருந்துள்ளனர். இதுவே சிறுமியை இந்த நிலைமையில் கொண்டு போய் விட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.