2023 ஆம் புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் உலகின் முதல் நாடாக மத்திய பசுபக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 ஆம் புத்தாண்டு பிறந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் இன்னும் சில மணி நேரங்களில் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது.
இந்த புத்தாண்டை எதிர்பார்த்து இந்திய மக்களும் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த புத்தாண்டின் கடைசி நாளான இன்று 2022 ஆம் ஆண்டுக்கு குட்பை சொல்லியும் வருகிற 20203 ஆம் புத்தாண்டை இனிய ஆண்டாக அமைய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் புத்தாண்டை வரவேற்று பதிவிட்டு வருகின்றனர்.