இறைவனது அருளை பெறத் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டத்தின் முதன்மையானநோக்கமாகும் . தற்போது இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 3 முக்கிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி, இனி திருவண்ணாமலை அருணாசலேசுவரர், மதுரை மீனாட்சி அம்மன், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். முன்பு, பழனி, ஸ்ரீரங்கம், உள்ளிட்ட 5 கோவில்களில் இந்த திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 3 கோவில்களில் தொடங்கப்பட்டுள்ளது.