கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.
இதனால் தமிழக அரசுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், உயிரை துச்சமாக கருதி பணி செய்த செவிலியர்களுக்கு திமுக அரசு கொடுத்த புத்தாண்டு பரிசை பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.