மலேசியாவில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 150 பேர் விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை இரத்து செய்துள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 120க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது
மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்தனர்.பிலிப்பைன்ஸில் இருந்து வந்த 3 விமானங்கள் மலேசியாவில் தரையிறங்கியது, அங்கிருந்து மாணவர்கள் தாயகம் திரும்ப முடியவில்லை.
இதையடுத்து இந்திய அரசின் முயற்சியால் மலேசிய விமான நிலையத்தில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்த மாணவர்களை இந்திய அரசு அனுப்பிய விமானம் விசாகபட்டினத்திற்கு அழைத்து வந்தது.