Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ…. எடிட்டிங்ல தூங்கிட்டேன்…. விஜய் ரசிகரிடம் சிக்கிய அஜித்…. கலாய்கும் நெட்டிசன்கள்…!!

துணிவு பட டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றார்கள்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இதற்கு அஜித் ரசிகர்கள் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் விஜய் ரசிகர்கள் அதற்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றார்கள். ட்ரைலரில் அஜித் போட்டில் போகும் போது ஜாக்கெட் அணிந்தவாறு செல்கின்றார். இதற்கு விஜய் ரசிகர்கள் தெய்வத்துக்கே மாறு வேஷமா.. அட எடிட்டிங்ல தூக்க மறந்துட்டாங்கய்யா என கிண்டலாக பதிவிட்டு இருக்கின்றார்கள்.

https://twitter.com/CoimbatoreFish/status/1609188776236167170?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1609188776236167170%7Ctwgr%5Ecaf6b5943fd0998431b526f3ea5d0dc330a82bac%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2FCoimbatoreFish2Fstatus2F1609188776236167170widget%3DTweet

Categories

Tech |