தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் பிரவீனா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய போட்டோ மற்றும் தன் மகளின் போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடம் என்னுடைய போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து நான் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், என் போட்டோ மற்றும் என் மகளின் போட்டோவை ஆபாசமான முறையில் மார்பிங் செய்து வலைதளத்தில் வெளியிட்டு எங்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக என்னுடைய மகள் போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் நடிகை ரோஜா தன்னுடைய மகளின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வலைதளத்தில் வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில், தற்போது நடிகை பிரவீனாவும் அப்படி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.