புத்தாண்டு இரவில் வீலிங்-பைக்ரேஸ்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்ரேஸுக்கும் வீலிங் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பூங்கா ரோடு, அங்கிருக்கும் பூங்காக்கள், துறைமுகம், தெர்மல் நகர் பீச் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட அனுமதி இல்லை.
மேலும் இரவு நேரங்களில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். மேலும் நல்லிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது. புத்தாண்டு இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ரேசில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. தடையை மீறி பைக் ரேஸில் ஈடுபடுவோரின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள். மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும். இது போலவே பைக்கில் வீலிங் செய்வது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது மது அருந்திவிட்டு இடையூறு செய்வது மது போதையில் வாகனம் ஓட்டுவது என ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.