கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டின் கால்பந்து பயிற்சியாளர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இந்த வைரஸ் தாக்கத்தால் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோரை காவு வாங்கிய இந்த கொடிய வைரஸ் விளையாட்டு வீரர் ஒருவரின் உயிரையும் பறித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
ஸ்பெயின் நாட்டின் 21 வயது கால்பந்து பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவர் ஸ்பெயினின் நாட்டின் அத்லெடிகோ போர்ட்டடா ஆல்டா என்ற யூத் கால்பந்து அணியில் இணைந்து ஆடினார்.
நான்கு ஆண்டுகளாக அசைடு அணிக்காக பயிற்சியாளராக இருந்து வந்த இவர் ரத்த புற்று நோய்யால் அவதிப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்து வந்தது. மேலும் மூச்சுத்திணறல் இருந்து வர மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த பிரான்சிஸ்கோ கார்சியா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். உலகிலேயே பொருளாதாரத்தில் குறைந்த வயதில் பலியானவர் கார்சியா என்பது குறிப்பிடத்தக்கது.